இம்மண்ணுலகில் வாழும் அனைவரையும் நவகிரகங்கள் வழிநடத்துகின்றன. ஒருவர் பிறக் கும்போது இருக்கும் கிரகநிலையைத் துல்லிய மாக விளக்குவதே ஜனன ஜாதகமாகும். ஜனன ஜாதகத்தில் கிரகங்கள் பலமாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
ராசி மண்டலத்தை 12 பிரிவாகப் பிரித்துள் ளார்கள். இந்திய ஜோதிட முறையில் ஒருவர் பிறக்கும்போது சூரியனின் கதிர்வீச்சு எங்கு விழுகிறதோ அதை லக்னமாகக் கொண்டு ஜாதகப் பலனையும், சந்திரனை மையமாகக் கொண்டு கோட்சாரப் பலனையும் நிர்ணயம் செய்கிறார்கள். மேற்கத்திய ஜோதிட முறையில் சூரியனை மையமாகக் கொண்டு பலனைக் கூறுகிறார்கள்.
ஜென்ம லக்னத்திற்கு யோகத்தை ஏற்படுத்தும் ஸ்தானங்கள், கெடுதியை ஏற்படுத்தும் ஸ்தானங்கள் என சில உள்ளன.
ஜென்ம லக்னத்திற்கு கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10 ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. கேந்திரத்தில் பாவிகள் அமையப்பெற்றால் மிகச்சிறப்பான பலன்கள் உண்டாகும். கேந் திரங்களில் 1-ஆம் வீட்டைவிட 4-ஆம் வீடும், 4-ஆம் வீட்டைவிட 7-ஆம் வீடும், 7-ஆம் வீட்டைவிட 10-ஆம் வீடும் பலம் வாய்ந் தவை. கேந்திரங்களில் கிரகங்கள் அமையப் பெற்றால் ஜாதகரின் ஜீவன அமைப்பு, பொரு ளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். சுபகிரகம் கேந்திர ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் பெற்று பலம்பெற்றால் கேந்திராதிபதி தோஷம் உண்டாகி நற்பலனைக் குறைவாகத் தருகிறது.
அடுத்து திரிகோண ஸ்தானங்களான 1, 5, 9 ஆகியவை சிறப்பு வாய்ந்தவை. 1, 5, 9-ல் அமையும் கிரகங்கள் ஜாதகரை அனைத்து விதத்திலும் உயர்த்தக் கூடியவை. இதில் 1-ஐவிட 5-ஆம் வீடும், 5-ஆம் வீட்டைவிட 9-ஆம் வீடும் பலம் வாய்ந்தவை.
ஒருவரது ஜாதகத்தில் கேந்திர ஸ்தானா திபதியும் திரிகோண ஸ்தானாதிபதியும் இணைந்திருந்தால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் தேடிவரும். கேந்திர திரிகோணா திபதிகள் இணைந்திருப்பதும், பரிவர்த் தனைப் பெறுவதும், ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதும் நற்பலனை உண்டாக்கும்.
ஜென்ம லக்னத்திற்கு தன ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 2-ஆம் பாவமும், லாப ஸ்தானம் என வர்ணிக்கப்படும் 11-ஆம் பாவ மும் நற்பலனைத் தரும் ஸ்தானங்களாகும்.
ஒருவரது ஜாதகத்தில் 1, 2, 4, 5, 7, 9, 10, 11-ஆம் பாவத்தின் அதிபதிகள் இணை வதும், பரிவர்த்தனைப் பெறுவதும், பலம் பெறுவதும் சிறப்பான அமைப்பாகும்.
இதற்கடுத்து, ஜென்ம லக்னத்திற்கு 3, 6, 8, 12-ஆம் வீடுகள் மறைவு ஸ்தானங்களாகும்.
இதில் சுபர்களுக்கு 3, 6, 8, 12-ஆம் வீடுகளும், அசுபர்களுக்கு 8, 12-ஆம் வீடுகளும் மறைவு ஸ்தானங்களாகும். 3, 6-ஆம் வீடுகள் உபஜெய ஸ்தானமாக வருவதால், பாவிகள் 3, 6, 10, 11-ல் அமைவது நற்பலனைத் தரும் என்பதால் 3, 6-ல் பாவிகள் அமைவது கெடுதியில்லை.
ஆக, 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் மறைவு ஸ்தானாதிபதிகள் என்பதால் கெடுதியைத் தரும் என்றாலும், 3, 6, 8, 12-க்கு அதிபதிகள் ஒருவருக்கொருவர் இடம்மாறியோ, பரிவர்த்தனைப்பெற்றோ இருந்தால் விபரீத ராஜயோகம் உண்டாகி நற்பலன் உண்டாகும்.
அதாவது 3-ஆம் அதிபதி 6, 8, 12-ல் அமைந்தோ, 6-ஆம் அதிபதி 3, 8, 12-ல் அமைந்தோ, 8-ஆம் அதிபதி 3, 6, 12-ல் அமைந்தோ, 12-ஆம் அதிபதி 3, 6, 8-ல் அமைந்தோ இருந்தால் கெடுதியை ஏற்படுத்து வதற்கு பதில் நற்பலனை ஏற்படுத்து கிறார்கள்.
12 லக்னங்களை மூன்றுவிதமாகப் பிரித்துள்ளார்கள். அதாவது மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்தை சர லக்னம் என்றும், சர லக்னத்திற்கு பாதக லக்னமாக 11-ஆம் வீட்டையும், மாரக ஸ்தானமாக 2, 7-ஆம் பாவத்தையும் குறிப்பிட்டுள்ளனர். அதுபோல ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்ப லக்னங்களை ஸ்திர லக்னம் என்றும், ஸ்திர லக்னத்திற்கு 9-ஆம் வீடு பாதக ஸ்தானம்; 3, 8-ஆம் வீடுகள் மாரக ஸ்தானம் என்று கூறியுள்ளனர். அடுத்து மிதுனம், கன்னி, தனுசு, மீன லக்னங்களை உபய லக்னமாகவும், இதற்கு 7-ஆம் வீடு பாதக ஸ்தானமாகவும், 7, 11-ஆம் வீடுகள் மாரக ஸ்தானமாகவும் வகுத்துள்ளார்கள்.
ஒருவர் ஜாதகத்தில் பாதகாதிபதியும், பாதக ஸ்தானத்தில் அமைந்த கிரகமும், பாதகாதிபதி நட்சத்திரத்தில் அமைந்த கிரகமும் பொதுவாக இழப்புகளை உண்டாக்குகின்றன. பாதகாதிபதி திரிகோண ஸ்தானத்தில் அமைந்திருந்தாலோ, மறைவு ஸ்தானத்தில் இருந்தாலோ அதிக கெடுதியைத் தருவதில்லை.
அதுபோல ஒவ்வொரு லக்னத்திற்கும் மாரக ஸ்தானத்தில் அமைந்த கிரகத்தின் தசை, புக்திக் காலத்திலும், மாரகாதிபதியான தசை, புக்திக் காலத்திலும் ஏதாவது உடல்நிலை பாதிப்பு உண்டாகிறது.
மேற்கூறிய தசை, புக்தி நடக்கும்போது ஏழரைச்சனியும், அஷ்டமச்சனியும் இணைந்து நடைபெற்றால் கெடுதியையும் கண்டத்தையும் சந்திக்க நேரிடுகிறது. அதனால் மேற்கூறிய தசை, புக்தி நடைபெறும்போது எதிலும் கவனத்துடன் இருப்பது மிகவும் உத்தமம்.
செல்: 72001 63001